Advertisement

தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா

By: vaithegi Fri, 07 July 2023 2:18:53 PM

தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகிந்திர சிங் தோனி இன்று தனது 42- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து இது தொடர்பாக அவர் ட்வீட்டரில் கூறியதாவது ” என்னுடைய பெரிய சகோதரர் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

suresh raina,birthday ,சுரேஷ் ரெய்னா,பிறந்தநாள்

பிட்ச்சை பகிர்வதில் தொடங்கியதிலிருந்து நம்மளுடைய கனவுகளை பகிர்வது வரை, நாம் இருவரும் சேர்ந்து உருவாக்கி உள்ள இந்நட்பை யாராலும் உடைக்கவே முடியாது.ஒரு தலைவனாகவும், நண்பனாகவும் நீங்கள் கொடுத்த பலம்தான், கிரிக்கெட் வாழ்க்கையில், என்னுடைய கலங்கரை விளக்கமாக இருந்தது.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும், இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். உங்களது மேஜிக்கை பரப்பிக்கொண்டே இருங்கள்”என்று அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags :