Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டி20 முத்தரப்பு தொடர்; நியூசிலாந்த் சென்றுள்ள வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள்

டி20 முத்தரப்பு தொடர்; நியூசிலாந்த் சென்றுள்ள வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள்

By: Nagaraj Fri, 07 Oct 2022 11:29:12 AM

டி20 முத்தரப்பு தொடர்; நியூசிலாந்த் சென்றுள்ள வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள்

கிறிஸ்ட்சர்ச் : டி20 முத்தரப்பு தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன.

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கும் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்கதேச அணிகள் மோதுகின்றன. புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும்.

after losing,bangladesh,eliminated,new zealand,pakistan, ,அணிகள், டி20 முத்தரப்பு, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம்

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அடுத்ததாக சொந்த மண்ணில் நடந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-4 என்ற கணக்கில் இழந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆசிய கோப்பையின் லீக் சுற்றில் வங்கதேச அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த தொடர் 3 அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :