Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வெப் தொடரில் நடிகையாக களம் இறங்குகிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா

வெப் தொடரில் நடிகையாக களம் இறங்குகிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா

By: Nagaraj Fri, 13 Nov 2020 7:58:31 PM

வெப் தொடரில் நடிகையாக களம் இறங்குகிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா

வெப் தொடரில் நடிக்கிறார் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாலியல், கருக்கலைப்பு மற்றும் நோய்கள் சம்பந்தமான விஷயங்களை எடுத்து சொல்லும் எம்டிவி நிஷேத் என்ற வெப் தொடர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகிய வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த தொடரின் அடுத்த பாகம் தயாராக உள்ளது. இதற்கு 'எம்டிவி நிஷேத் அலோன் டுகதர்' என்று பெயர் வைத்துள்ளனர். காசநோய் பாதிப்பை மையமாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடராக இருவாகும. இந்த தொடரில் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா நடிக்கவுள்ளார்.

sania mirza,actress,web series,tennis player ,
சானியா மிர்சா, நடிகை, வெப் தொடர், டென்னிஸ் வீராங்கனை

இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில், "காசநோய் நமது நாட்டில் தீராத வியாதியாக உள்ளது. இந்த நோயில் சிக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்களாக உள்ளனர்.

இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை எம்டிவி நிஷேத் அலோன் டுகதர் தொடர் அழுத்தமாக பதிவு செய்யும். நான் இந்த தொடரில் பங்கேற்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துளார். இதுவரை விளையாட்டு வீராங்கனையாக அறியப்பட்ட சானியா தற்போது நடிகையாக அவதரித்துள்ளார்.

Tags :