Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெஸ்ட் கிரிக்கெட் என்றால் ஒரே பிராண்ட் பந்துதான் என்று அறிவிக்க வேண்டும்

டெஸ்ட் கிரிக்கெட் என்றால் ஒரே பிராண்ட் பந்துதான் என்று அறிவிக்க வேண்டும்

By: Nagaraj Fri, 04 Sept 2020 4:19:17 PM

டெஸ்ட் கிரிக்கெட் என்றால் ஒரே பிராண்ட் பந்துதான்  என்று அறிவிக்க வேண்டும்

டெஸ்ட் கிரிக்கெட் என்றால் ஒரே பிராண்ட் பந்துதான் என்று ஐசிசி அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தானது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து நாடுகள் டியூக்ஸ் பந்து, இந்தியா எஸ்.ஜி. பந்து, ஆஸ்திரேலியா கூக்கப்புரா பந்து என்ற வகையில் பயன்படுத்தி வருகின்றன.

இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கையாளும் பந்தானது வேறுபடும்போது, மற்ற நாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது பந்து வீச்சாளர்களுக்கு அது கடினமான ஒன்றாக உள்ளது.

only brand,ball,icc,waqar younis ,ஒரே பிராண்ட், பந்து, ஐசிசி, வக்கார் யூனிஸ்

இது உண்மையில் தவிர்க்கப்பட வேண்டும், அதாவது டெஸ்ட் கிரிக்கெட் என்றால் ஒரே பிராண்ட் பந்துதான் என்று ஐசிசி அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகை ப்ராண்ட் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஒரே மாதிரியான பந்தினைப் பயன்படுத்த வேண்டும்.

நான் எந்தவொரு குறிப்பிட்ட பிராண்ட்டைப் பற்றியும் பேசவில்லை. பொதுவான ப்ராண்ட் அதுமட்டும் தான் நான் வைக்கும் கோரிக்கை, ஐசிசி இந்த முடிவை பரிசீலிக்க வேண்டும். பந்து வீச்சாளர்களுக்கு இது உண்மையில் பெரும் கடினமான விஷயமாகவே உள்ளது.

Tags :
|
|