Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்ய சம்மதித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முன்னாள் கேப்டன் நன்றி

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்ய சம்மதித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முன்னாள் கேப்டன் நன்றி

By: Karunakaran Mon, 08 June 2020 4:23:05 PM

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்ய சம்மதித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முன்னாள் கேப்டன் நன்றி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், 3 மாதங்களுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நாளை வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து செல்லவுள்ளது.

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந்தேதி தொடங்கவுள்ளது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிவடையும். இந்த இக்கட்டான நேரத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வருவதை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் பாராட்டியுள்ளார்.

corona threat,west indies,england,test match,cricket ,கொரோனா அச்சுறுத்தல்,வெஸ்ட் இண்டீஸ்,இங்கிலாந்து,டெஸ்ட் போட்டி,கிரிக்கெட்

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த இக்கட்டான நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்து டெஸ்டில் ஆடுவது சிறப்பானது எனவும், அவர்களது விளையாட்டு உத்வேகத்தை காட்டுகிறது எனவும், இதற்காக அவர்களை பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது பல்வேறு நாடுகளுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு மற்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கலாம் என்று கூறியுள்ளார்.

Tags :