Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும்

2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும்

By: Karunakaran Tue, 28 July 2020 1:01:15 PM

2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும்

13-வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும். ஒருநாள் சூப்பர் லீக் என்ற பெயரில் கணக்கிடப்படும் தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இதில் தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் முழு உறுப்பினர்களான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் 2015-17ம் ஆண்டில் நடந்த உலக சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து ஆகிய 13 அணிகள் கலந்து கொள்கின்றன.

super league,2023 world cup,july 30th,icc ,சூப்பர் லீக், 2023 உலகக் கோப்பை, ஜூலை 30, ஐ.சி.சி.

2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் ஒருநாள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக இந்த போட்டியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது ஒருநாள் சூப்பர் லீக் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கவுள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.

இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் சவுதம்டனில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து சூப்பர் லீக் போட்டி ஆரம்பமாகிறது என்றும் எஞ்சிய போட்டிக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

Tags :