Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கிறது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்

அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கிறது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்

By: Nagaraj Sat, 29 July 2023 3:10:21 PM

அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கிறது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்

புதுடெல்லி: அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடக்கிறது... 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, உலகக்கோப்பை சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

result soon,ahmedabad,interval,icc,changes ,விரைவில் முடிவு, அகமதாபாத், இடைவெளி, ஐசிசி, மாற்றங்கள்

இந்நிலையில், 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 2023 உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் அனைத்து கிரிக்கெட் சங்கங்களிடமிருந்தும் டிக்கெட் விலை நிர்ணயம் குறித்த ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், போட்டி அட்டவணை மாற்றத்திற்காக மூன்று உறுப்பினர்கள் (கிரிக்கெட் வாரியங்கள்) ஐசிசி-க்கு கடிதம் எழுதியுள்ளன. தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டுமே மாற்றப்படும். மைதானங்கள் மாற்றப்படாது.

ஆட்டங்களுக்கு இடையே ஆறு நாட்கள் இடைவெளி இருந்தால், அதை 4-5 நாட்களாக குறைக்க முயற்சிக்கிறோம். 3-4 நாட்களில் இது தெளிவாகிவிடும். ஐசிசி-யுடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் நடக்கும்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி தொடர்பாக அவர் கூறுகையில், நான் முன்பு கூறியது போல், சில உறுப்பினர் வாரியங்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளன. விரைவில் முடிவு எடுக்கப்படும்' என்றார்.

Tags :
|