Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மிகச்சிறந்த ரசிகை என் அம்மாதான்; ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷித் கான் கண்ணீருடன் தகவல்

மிகச்சிறந்த ரசிகை என் அம்மாதான்; ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷித் கான் கண்ணீருடன் தகவல்

By: Nagaraj Wed, 30 Sept 2020 2:01:21 PM

மிகச்சிறந்த ரசிகை என் அம்மாதான்; ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷித் கான் கண்ணீருடன் தகவல்

என் அம்மாதான் மிகச்சிறந்த ரசிகை... என்னுடைய மிகச்சிறந்த ரசிகை என்னுடைய அம்மாதான். ஐபிஎல் தொடரில் நான் ஆட்டநாயகன் விருது வாங்கும்போது அதைக் காண இந்த நேரத்தில் அவர் உயிருடன் இல்லை என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ரஷித் கான் கண்ணீருடன் தெரிவித்தார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.

4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்று மீண்டும் டி20 போட்டியில் தனது வழக்கமான ஃபார்முக்குத் திரும்பினார். பின்னர் ரஷித் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

rashid khan,my mother,warner,fan,eyeball ,ரஷித்கான், என்னுடைய அம்மா, வார்னர், ரசிகை, கண்கலங்கினார்

''இன்று நான் வாங்கிய ஆட்டநாயகன் விருதை மறைந்த என்னுடைய அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த உலகில் எனக்கு மிகப்பெரிய ரசிகை என்னுடைய அம்மாதான். கடந்த ஒன்றரை ஆண்டுகளும் எனக்கு மிகக்கடினமான காலமாக இருந்தது. கடந்த ஓராண்டுக்கு முன் என்னுடைய அப்பா காலமானார். கடந்த ஜூன் மாதம் என்னுடைய தாய் உயிரிழந்தார். நான் அந்தத் துக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆகின.

இந்த உலகிலேயே என்னுடைய ஆட்டத்துக்கு தீவிர ரசிகை என்னுடைய அம்மாதான். குறிப்பாக ஐபிஎல் போட்டியில் நான் பந்துவீசுவதை மிகவும் ரசிப்பார். நான் ஆட்டநாயகன் விருது வென்ற ஒவ்வொரு முறையும் என்னுடன் தொலைபேசியில் பேசுவார். ஆனால், இன்று என்னுடன் பேசுவதற்கு அவர் உயிருடன் இல்லை என்று கூறி கண்கலங்கினார்.

மேலும் அவர் கூறுகையில், வார்னர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார். அணிக்கு எது சிறந்தது எது என உனக்குத் தெரியும். அதைச் செய் எனச் சுதந்திரமாக விட்டுவிடுவார். எனக்குப் பந்துவீச்சு சரியாக எடுக்கவில்லை என்றால் மட்டும் வார்னரிடம் ஆலோசனை கேட்பேன்'' என்றார்.

Tags :
|
|