Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டோனிக்கு வழியனுப்பும் போட்டியை நடத்துவதில் ஆர்வமுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

டோனிக்கு வழியனுப்பும் போட்டியை நடத்துவதில் ஆர்வமுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

By: Karunakaran Thu, 20 Aug 2020 5:44:32 PM

டோனிக்கு வழியனுப்பும் போட்டியை நடத்துவதில் ஆர்வமுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக இருந்த முன்னாள் கேப்டன் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 15 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் அறிவித்தார். அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாடுவார் என்ற எதிர்பார்த்த வேளையில் அவரது ஓய்வு முடிவு சக வீரர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ‘சாதனை நாயகன்’ 39 வயதான டோனிக்கு வழியனுப்பும் போட்டி ஒன்றை நடத்த வேண்டும், அதை சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், டோனிக்கு பிரியாவிடை ஆட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

bcci,dhoni,hosting match,indian cricket ,பி.சி.சி.ஐ, தோனி, ஹோஸ்டிங் போட்டி, இந்திய கிரிக்கெட்

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி கூறுகையில், இப்போதைக்கு இந்திய அணிக்கு எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை. ஐ.பி.எல். முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று பார்ப்போம். இந்திய கிரிக்கெட்டுக்காக டோனி அளப்பரிய பங்களிப்பு அளித்துள்ளார். எல்லாவிதமான மரியாதைகளுக்கும் அவர் தகுதியானவர். ஆனால் டோனி வித்தியாசமான ஒரு வீரர். யாரும் நினைக்காத நேரத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு விட்டார். ஐ.பி.எல். போட்டியின் போது அவரிடம் இது பற்றி பேசுவோம் என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் மதன்லால் கூறுகையில், டோனிக்காக, இந்திய கிரிக்கெட் வாரியம் வழியனுப்பும் போட்டி நடத்தினால் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவேன். அவர் ஒரு ஜாம்பவான். இது போன்று சாதாரணமாக போக விடக் கூடாது. அவரை மீண்டும் களத்தில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் என்று கூறினார்.

Tags :
|
|