Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பாருக்கு வெளியே தகராறு செய்த விவகாரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் கேப்டன் கைது

பாருக்கு வெளியே தகராறு செய்த விவகாரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் கேப்டன் கைது

By: Karunakaran Fri, 21 Aug 2020 7:25:22 PM

பாருக்கு வெளியே தகராறு செய்த விவகாரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் கேப்டன் கைது

கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை என்பதால் விளையாட்டு வீரர்கள் பல்வேறு விதங்களில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களிலும் பிற ஏதாவது ஒன்றிலும் பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து பிரிமீயர் லீக்கில் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டனாக ஹாரி மாகுயர் இருந்து வருகிறார். இந்நிலையில் கிரீஸ் நாட்டின் மைகோனோஸ் தீவில் போலீஸ்காரர்களுக்கு சில இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

captain,manchester united football team,arrest,bar ,கேப்டன், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி, கைது, பார்

அப்போது ஹாரி மாகுயர் அவர்களுக்கிடையேயான தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசார் ஹாரி மாகுயரை கைது செய்துள்ளனர். ஹாரியுடன் மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மான்செஸ்டர் யுனெடெட் அணி கூறுகையில், மைகோனோசில் நடைபெற்ற சம்பவம் குறித்து அறிந்தோம். ஹாரியுடன் தொடர்பு கொண்டபோது, கிரீஸ் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தார் என்று தெரிவித்துள்ளது.

Tags :
|