Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கேப்டன் பதவி எனக்கு புதிதல்ல... சொல்கிறார் கொல்கத்தா அணி தலைவர் நிதிஷ் ராணா

கேப்டன் பதவி எனக்கு புதிதல்ல... சொல்கிறார் கொல்கத்தா அணி தலைவர் நிதிஷ் ராணா

By: Nagaraj Wed, 29 Mar 2023 10:59:20 AM

கேப்டன் பதவி எனக்கு புதிதல்ல... சொல்கிறார் கொல்கத்தா அணி தலைவர் நிதிஷ் ராணா

கொல்கத்தா: கேப்டன் பதவி எனக்கு புதிதல்ல. கடந்த 2-3 வருடங்களாக டீம் லீடர் குழுவில் நானும் அங்கம் வகித்து வருகிறேன் என்று கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதால் அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராணா, ‘கேப்டன் பதவி எனக்கு புதிதல்ல. கடந்த 2-3 வருடங்களாக டீம் லீடர் குழுவில் நானும் அங்கம் வகித்து வருகிறேன்.

நான் இதுவரை கள உத்தி குழுவில் ஒரு பகுதியாக இருந்தேன், இப்போது நான் கேப்டனாக மட்டுமே செயல்படுவேன். கேப்டன் பதவி என்பது வெறும் அடையாளம். இதை கூடுதல் நெருக்கடியாக எடுத்துக்கொள்ள மாட்டேன். பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடுவதை எப்போதும் விரும்புகிறேன். வீரர்களை திறம்பட நிர்வகிப்பதுதான் முக்கியம்.

captain,crisis,interview,nitish rana,rank ,captain, crisis, Interview, Nitish Rana, Rank, கேப்டன், நிதிஷ் ராணா, நெருக்கடி, பதவி, பேட்டி

ஏனெனில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களை சரியாக ஒருங்கிணைக்க வேண்டும். அணியின் மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் எனக்கு உதவுவார்கள். அவர்களின் உதவியால் அணியை சிறப்பாக வழிநடத்துவேன் என நம்புகிறேன். கேப்டன் பதவியில் யாரை முன்மாதிரியாக பார்க்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.

யாருடைய முன்மாதிரியையும் பின்பற்றுவதற்கு நான் முன்னுரிமை கொடுக்கவில்லை. கேப்டன்சியில் என்னுடைய பாணியில் பணியாற்ற விரும்புகிறேன்’ என்றார். கொல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை மொஹாலியில் 1-ந்தேதி எதிர்கொள்கிறது.

Tags :
|