Advertisement

தோனி தலைமையில் அதிரடி சரவெடியாக வெடிக்குமா சென்னை அணி

By: Nagaraj Fri, 31 Mar 2023 10:20:48 AM

தோனி தலைமையில் அதிரடி சரவெடியாக வெடிக்குமா சென்னை அணி

குஜராத்: அதிரடி சரவெடியாக இந்தாண்டு 16-வது ஐபிஎல் போட்டித் தொடர் அகமதாபாத்தில் இன்று 31ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் உடன் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது.

வெற்றிகரமான கேப்டன் என்று பெயர் பெற்ற எம்.எஸ்.தோனி இதுவரை 4 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். 2010, 2011, 2018, 2021 என அசத்தலாக கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். முக்கியமாக ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்றால் அது சென்னைதான்.

கடந்த ஆண்டு சென்னை அணிக்கு ரொம்ப கடினமான ஆண்டுதான். தோனி கேப்டன்சியில் இருந்து விலகினார். ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர்ந்து சறுக்கியது என்று பல சவால்களுக்கு மத்தியில் புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்திற்கு போனது சென்னை அணி.

chennai team,strong,serious,strong,5th time ,
சென்னை அணி, வலு, தீவிரம், வலுவாக உள்ளது, 5வது முறை

இந்த சீசனில் தோனி தலைமையில் முழு பலத்துடன் களமிறங்குகிறது. தோனி தலைமை என்பதால் அணிக்கு அசுர பலம் கிடைத்துள்ளது என்கின்றனர் ரசிகர்கள். தொடக்க பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே அசத்தவார்கள். பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் பலம் சேர்க்கக்கூடும்.

4-வது இடத்தில் களமிறங்கும் அம்பதி ராயுடு உறுதுணையாக இருப்பார். நடுவரிசையில் ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா வலுவாக உள்ளனர். 5-வது முறை மகுடம் சூடுவதில் தோனி தீவிரம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|