Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு

ஐபிஎல் போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு

By: Monisha Sun, 12 June 2022 4:57:30 PM

ஐபிஎல் போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு

மும்பை : இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன. இதில் அறிமுக அணியான குஜராத் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். போட்டிக்குரிய டி.வி. ஒளிபரப்பு உரிமம் மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.

2018-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.16,347 கோடிக்கு டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது. தற்போது இந்த உரிமம் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து, ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. இதில் முதல்முறையாக மின்னணு ஏலம் மூலம் உரிமம் வழங்கப்படவுள்ளது.

ipl,broadcast,rights,auction,bcci ,ஐபிஎல், ஒளிபரப்பு, உரிமைகள், ஏலம், பிசிசிஐ

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை பெற டிஸ்னி-ஸ்டார், சோனி, ஜீ குழுமம், ரிலையன்ஸ் வியாகாம்18 உள்பட பத்து முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த 4 பிரிவுகள் அனைத்தையும் சேர்த்து மொத்தத்தில் ரூ.60 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் தொகையை குறிப்பிட்டு ஏலம் கேட்பார்கள். இரண்டு அல்லது 3 ரவுண்டுகள் ஏலம் கேட்க வாய்ப்பு வழங்கப்படும். பின்னர், யார் அதிக தொகைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு உரிமம் ஒதுக்கப்படும். தொடர்ந்து அதிக தொகை கேட்டுக் கொண்டே போனால் ஏலம் மறுநாள் கூட நீடிக்கலாம். இந்த ஏலத்திற்கான முடிவு நாளை அறிவிக்கப்படும்.

Tags :
|
|