Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்படுவதால் இளம் வீரர்களுக்கு நெருக்கடி குறைவாக இருக்கும் - சைமன் காடிச்

ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்படுவதால் இளம் வீரர்களுக்கு நெருக்கடி குறைவாக இருக்கும் - சைமன் காடிச்

By: Karunakaran Sun, 06 Sept 2020 9:51:43 PM

ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்படுவதால் இளம் வீரர்களுக்கு நெருக்கடி குறைவாக இருக்கும் - சைமன் காடிச்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13-வது சீசன் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டி எப்போதும் மைதானம் நிரம்பிய ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டி நடக்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் இல்லாதது இளம் வீரர்களுக்கான நெருக்கடியை சற்று குறைக்கும் என சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் இதுகுறித்து கூறுகையில், என்னுடைய தனிப்பட்ட முறையில், சில இளம் வீரர்கள் இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள். மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதது சத்தம் மற்றும் கவனச் சிதறல்கள் போன்றவற்றில் அவர்களுக்கான நெருக்கடியை சற்று குறைப்பதாக இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறினார்.

young players,fans,simon gaddy,rcb ,இளம் வீரர்கள், ரசிகர்கள், சைமன் காடி, ஆர்.சி.பி.

சில அனுபவ வீரர்களுக்கு ரசிகர்கள் இல்லாதது அதிக சவால்களை ஏற்படுத்தும். அவர்கள் ரசிகர்கள் ஆரவாரத்தை மிகப்பெரிய பலமாக கருதுவார்கள். எங்களுடைய அணி அதிகமாக உத்வேகத்துடன் சென்று, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13-வது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி, முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags :
|