Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100-வது தோல்வியை சந்தித்த டெல்லி அணி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100-வது தோல்வியை சந்தித்த டெல்லி அணி

By: Karunakaran Mon, 12 Oct 2020 6:03:33 PM

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100-வது தோல்வியை சந்தித்த டெல்லி அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது போட்டி நேற்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 162 ரன்கள் அடித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில், இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றியை ருசித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் லெவன் அணி சரியாக அமைந்துள்ளதால் மாற்றத்தை விரும்பவில்லை. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அதே நிலையில்தான் இருந்தது. டெல்லி அணி சரியான பேலன்ஸ், காம்பினேசன் கொண்ட அணியாக திகழ்கிறது.

delhi team,100th defeat,ipl cricket tournament,mumbai team ,டெல்லி அணி, 100 வது தோல்வி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, மும்பை அணி

நேற்றைய ஆட்டத்தின் தோல்வி டெல்லி அணிக்கு 100-வது தோல்வியாகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 100 தோல்விகளை சந்தித்த 2-வது அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 100 தோல்விகளை சந்தித்துள்ளது.

டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஒரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. ரிஷப் பண்டும் இல்லை. ஹெட்மையரும் இல்லை. ஒரு சின்ன காரணத்தால் இரண்டு ஹிட்டர்களை இழந்ததால் டெல்லி அணியால் ரன்கள் குவிக்க இயலாமல் போனது.


Tags :