Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிரபல குத்துச்சண்டை வீரர் அண்டர்டேக்கர் ஓய்வை அறிவித்தார்

பிரபல குத்துச்சண்டை வீரர் அண்டர்டேக்கர் ஓய்வை அறிவித்தார்

By: Nagaraj Thu, 25 June 2020 1:16:11 PM

பிரபல குத்துச்சண்டை வீரர் அண்டர்டேக்கர் ஓய்வை அறிவித்தார்

ஓய்வை அறிவித்தார்... உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் ’தி அண்டர்டேக்கர்' தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

’’ரிங்கிற்குள் திரும்பி வர விருப்பமில்லை’’ என தி அண்டர்டேக்கர் கூறியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பற்றி புகழ்ந்து வருகின்றனர். மார்க் காலவே என்ற இயற்பெயரை கொண்ட 55 வயதான தி அண்டர்டேக்கர், சமீபத்தில் வெளியான ஒரு ஆவணப்படத்தில் தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 30 ஆண்டுகளாக WWE போட்டியில் பங்கேற்றுள்ளார். ’தி டெட்மேன்’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து, ‘தி லாஸ்ட் ரைட்’ எனும் ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது.

undertaker,rest,announcement,fans,admiration ,அண்டர் டேக்கர், ஓய்வு, அறிவிப்பு, ரசிகர்கள், புகழாரம்

அண்டர் டேக்கர் 3 முறை Heavy weight Champion, 6 முறை Tag Team Champion மற்றும் ரோயல் ரம்புள் உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டு உலகத்தர சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டு தனது மல்யுத்த வாழ்க்கையை தி அண்டர்டேக்கர் துவங்கினார். பின்னர் 1990களில் இருந்து WWE போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

WWE போட்டிகளில் முன்னோடி என தி அண்டர்டேக்கர் அழைக்கப்படுகிறார். 1992-ல் நடந்த சவப்பெட்டியில் எதிராளியை வைத்து பூட்டும் போட்டி, 1996-ல் நடந்த உயிருடன் புதைக்கும் போட்டி போன்றவற்றின் முதல் போட்டிகளில் தி அண்டர்டேக்கர் பங்கேற்றுள்ளார். இவரது ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|