Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தை 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக தகவல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தை 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக தகவல்

By: Monisha Wed, 23 Sept 2020 09:36:35 AM

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தை 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக தகவல்

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கியது. துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடி வருகின்றன.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சவுரவ் திவாரி 42 ரன்களும், டி காக் 33 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் எங்கிடி 3 விக்கெட்டும், தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

ipl cricket,chennai super kings,mumbai indians,tv,online ,ஐபிஎல் கிரிக்கெட்,சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்,டிவி,இணையதளம்

ஆரம்பத்தில் விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்துள்ளது. இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வுபடி இந்த எண்ணிக்கை தெரிய வந்திருப்பதாகவும், உலகின் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு லீக் போட்டியையும் முதல் நாளில் இத்தனை பேர் பார்த்ததில்லை என்றும், அந்த வகையில் இது புதிய உலக சாதனை என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|