Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

By: Karunakaran Wed, 08 July 2020 11:00:21 AM

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துடன் மோதவுள்ளது. இந்நிலையில் இன்று இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இன்னும் கட்டுக்குள் வராதநிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துணிச்சலுடன் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனால் இந்த போட்டி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

test match,england,west indies,cricket ,டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், கிரிக்கெட்

கொரோனா காரணமாக தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த தொடர் மூலம் உயிர்ப்பித்துள்ளன. இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்படும் நடைமுறை, பல கட்ட கொரோனா பரிசோதனை என மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ள இரு அணி வீரர்களும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்க ஐ.சி.சி. தற்காலிகமாக தடை விதித்துள்ளது. ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் வித்தியாசமான சூழலில் வீரர்கள் விளையாடவுள்ளனர். இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் இந்த டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி சிக்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

Tags :