Advertisement

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை அறிவித்தது ஐசிசி

By: Karunakaran Sun, 27 Dec 2020 4:50:03 PM

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை அறிவித்தது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை அறிவித்துள்ளது. அந்த அணிக்கு எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளது.
ஐசிசி அறிவித்துள்ள டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்: 1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் கெய்ல், 3. ஆரோன் பிஞ்ச், 4. விராட் கோலி, 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. கிளென் மேக்ஸ்வெல், 7. எம்எஸ் டோனி (விக்கட் கீப்பர்& கேப்டன்), 8. பொல்லார்ட், 9. ரஷித் கான், 10, பும்ரா, 11. மலிங்கா.

ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. ஐசிசி-யின் டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு செய்வதற்கான கால வரையறைக்குள் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அதிகமான சதங்கள் அடித்துள்ளார். என்றாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.

ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்: 1. அலஸ்டைர் குக், 2. டேவிட் வார்னர், 3. கேன் வில்லியம்சன், 4. விராட் கோலி, 5. ஸ்டீவ் ஸ்மித், 6. குமார் சங்ககரா, 7. பென் ஸ்டோக்ஸ், 8. அஸ்வின், 9. டேல் ஸ்டெயின், 10, ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

icc,best t20 squad,last 10 years,m s dhoni ,ஐ.சி.சி, சிறந்த டி 20 அணி, கடந்த 10 ஆண்டு, எம் எஸ் தோனி

ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய நபர்களை கொண்டு கனவு ஒருநாள் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. டி20-யை போன்று ஒருநாள் அணிக்கும் எம்எஸ் டோனியை கேப்டனாக அறிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பிடித்துள்ளனர். வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுணடர் ஷாகிப் அல்-ஹசனும் இடம் பிடித்துள்ளார்.

ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கனவு அணி:- 1. ரோகித் சர்மா, 2. டேவிட் வார்னர், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷாகிப் அல் ஹசன், 6. எம்எஸ் டோனி, 7. பென் ஸ்டோக்ஸ், 8. மிட்செல் ஸ்டார்க், 9. டிரென்ட் போல்ட், 10. இம்ரான் தஹிர், 11. லசித் மலிங்கா.

Tags :
|