Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி

By: Nagaraj Mon, 30 Jan 2023 11:31:39 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி

லக்னோ: போராடி வென்றது... இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்தது.

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி நியூசிலாந்து இன்னிங்ஸை திவான் கான்வேயும் பென் ஆலனும் தொடங்கினர்.

நியூசிலாந்து அணி வலுவான ஷாட் அடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எந்த பேட்ஸ்மேனும் 20 ரன்களை கூட தொடவில்லை. அதிகபட்சமாக கேப்டன் சான்ட்னர் 19 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து அணியால் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

டி20 சர்வதேசப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அடித்த குறைந்த ஸ்கோராக இது இருந்தது. எக்ஸ்ட்ராவில் 9 வைடுகள் உட்பட 10 ரன்கள் நியூசிலாந்துக்கு கிடைத்தது. இல்லாவிட்டால் அணியின் நிலை மோசமாகியிருக்கும்.

cricket,indian-team,new zealand,t20 , இந்திய அணி, கிரிக்கெட், டி20, நியூசிலாந்து

இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய வீரர்களும் திணறினர். நியூசிலாந்தும் முழு சுழல் தாக்குதலுடன் அழுத்தம் கொடுத்தது. போட்டியும் ஆச்சரியமளிக்கும் வகையில் கடைசி ஓவரை நோக்கி நகர்ந்தது. கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிக்னர் வீசினார். முதல் 4 பந்துகளில் இந்திய வீரர்கள் 3 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பதற்றம் அதிகரித்தது. சூர்யகுமார் யாதவ் 5வது பந்தை பவுண்டரிக்கு டாஸ் செய்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இன்னிங்ஸில் அவர் அடித்த ஒரே ஒரு பவுண்டரி இதுதான். இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 1-1 என சமன் செய்துள்ளது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. கடைசி 20 ஓவர் போட்டி வரும் 1ம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

Tags :