Advertisement

சென்னை – லக்னோ அணிகள் மோதிய போட்டி மழையால் நிறுத்தம்

By: Nagaraj Wed, 03 May 2023 11:55:04 PM

சென்னை – லக்னோ அணிகள் மோதிய போட்டி மழையால் நிறுத்தம்

லக்னோ: மழையால் போட்டி நிறுத்தம்... சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.

லக்னோ மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக க்ருனால் பாண்டியா கேப்டனாக செயல்படுவார்.

லக்னோ தொடக்க ஆட்டக்காரர்கள் மனன் வோரா மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். வோரா 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளில் அதிரடியாக ஆடி வந்த கைல் மேயர்ஸ் இந்தப் போட்டியில் 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். கரண் சர்மா 9 ரன்களிலும், கேப்டன் க்ருனால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

chennai,lucknow,match,rain,suspension,team ,அணி, சென்னை, நிறுத்தம், போட்டி, மழை, லக்னோ

அதிரடி பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, லக்னோ 44 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. நிக்கோலஸ் பூரனுடன் இணைந்த ஆயுஷ் படோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ஒருநாள் போட்டி போல விளையாடியதால் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர். பூரன் 31 பந்துகளில் 20 ரன்களும், படோனி 33 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர். லக்னோ 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.

Tags :
|
|