Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • முதல் போட்டியில் வெற்றி பெற முடியாத சோதனையாக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி

முதல் போட்டியில் வெற்றி பெற முடியாத சோதனையாக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி

By: Karunakaran Sun, 20 Sept 2020 1:05:35 PM

முதல் போட்டியில் வெற்றி பெற முடியாத சோதனையாக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி

ஐ.பி.எல். 2020 சீசன் நேற்று மாலை தொடங்கியது. அபு தாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிகொண்டன. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்பின் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனை தொடர்ந்து கொண்டு வருகிறது. முதலில் தோல்வியடைந்து வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு வந்து அதன்பின் விஸ்வரூம் பெறும். மும்பை இந்தியன்ஸ் தொடரை சிறப்பான வகையில் தொடங்கியது கிடையாது.

mumbai indians,first match.ipl,csk ,மும்பை இந்தியன்ஸ், முதல் போட்டி.ஐ.பி.எல்., சி.எஸ்.கே.

கடந்த 2013-ல் இருந்து தொடக்க போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது இல்லை. நேற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததால், தொடர்ச்சியாக 8 சீசன்களில் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. சிஎஸ்கே, கேகேஆர், ஆர்பிஎஸ் அணிகளிடம் தலா இரண்டு முறையும் ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளிடம் தலா ஒருமுறையும் தோல்வியடைந்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கண்டதில்லை. இதற்கு முன் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் மூலம் 6-வது முறையாக தோல்வியடைந்துள்ளது.

Tags :