Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அதிரடி காட்டி அசத்தி வருகிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி

அதிரடி காட்டி அசத்தி வருகிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி

By: Nagaraj Fri, 04 Dec 2020 6:32:16 PM

அதிரடி காட்டி அசத்தி வருகிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி

இரட்டை சதம்.... நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்திருந்த்து. கேப்டன் வில்லியம்சன் 97 ரன்களுடனும் டெய்லர் 31 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

அடுத்து இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய ராஸ் டெய்லர் மேற்கொண்டு 7 ரன்கள் சேர்த்த நிலையில் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

west indies,runs,cramble,kaylee geminsson ,வெஸ்ட் இண்டீஸ், ரன்கள், கிராம்பல், கேயிலி ஜெமின்சன்

தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் 7 ரன்களிலும், பிலந்தர் 14 ரன்களிலும், டேரியல் மீச்சேல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமனையில், நிலையத்து நின்று ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதமடித்து 251 (412 பந்து 34 பவுண்டரி 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

சற்று முன்வரை நியுசிலாந்து அணி 143 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 512 ரன்கள் குவித்துள்ளது. கேயிலி ஜெமின்சன் 47 ரன்களுடனும், டீம் சவுதி 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில், ரோச் மற்றும் கிராம்பல் தல 3விக்கெட்டுகளும், அல்சாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

Tags :
|