Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 25 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி

25 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி

By: Nagaraj Fri, 14 Aug 2020 08:31:12 AM

25 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளது பி.எஸ்.ஜி.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தொடரின் இறுதிகட்ட ஆட்டங்கள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பி.எஸ்.ஜி. (பிரான்ஸ்) அணியும், அடலன்டா அணியும் (இத்தாலி) மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில். 27-வது நிமிடத்தில் அடலன்டா வீரர் மரியோ பாசலிக் கோல் அடித்தார்.

semifinals,first time,25 years,goal,football ,அரையிறுதி, முதல்முறை, 25 ஆண்டுகள், கோல், கால்பந்தாட்டம்

இதற்கு பதில் கோல் திருப்ப பிஎஸ்ஜி அணி கடுமையாக முயற்சித்தது. இந்த முயற்சிக்கு ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. பி.எஸ்.ஜி. வீரர் நெய்மார் தட்டிக்கொடுத்த பந்தை மர்கியூனோஸ் கோலாக்கி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். தொடர்ந்து ஒதுக்கப்பட்ட கூடுதல் நிமிடத்தில் மற்றொரு பி.எஸ்.ஜி. வீரர் சோவ்போ மோட்டிங் கோல் போட்டு அசத்தினார்.

முடிவில் பி.எஸ்.ஜி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக்கில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.

Tags :
|