Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லி அணிக்கெதிராக ஜெயிக்க வேண்டிய போட்டியை கோட்டைவிட்ட பஞ்சாப் அணி

டெல்லி அணிக்கெதிராக ஜெயிக்க வேண்டிய போட்டியை கோட்டைவிட்ட பஞ்சாப் அணி

By: Karunakaran Mon, 05 Oct 2020 6:11:37 PM

டெல்லி அணிக்கெதிராக ஜெயிக்க வேண்டிய போட்டியை கோட்டைவிட்ட பஞ்சாப் அணி

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு அனில் கும்ப்னே, கேஎல் ராகுல் காம்பினேசனில் பஞ்சாப் அணி புது எழுச்சியுடன் விளையாடும் என கணிக்கப்பட்டது. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் டெல்லியை எதிர்கொண்டது. 158 ரன் இலக்கை தொடக்கத்தில் எட்ட திணறியது. மயங்க் அகர்வால் அதிரடி காட்ட கடைசி மூன்று பந்தில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், 4-வது பந்தில் ரன் எடுக்காத மயங்க் அகர்வால், 5-வது பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் ஜோர்டான் ஆட்டமிழக்க முதல் போட்டி சூப்பர் ஓவரானது. இதில் தோல்வியடைந்தது. அடுத்த போட்டியில் கேஎல் ராகுல் அதிரடி சதத்தால் ஆர்சிபியை 97 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், அடுத்தடுத்து மூன்று போட்டிகளான ராஜஸ்தானுக்கு எதிராக, மும்பைக்கு எதிராக. சென்னைக்கு எதிராக எந்தவித போராட்டமின்றி தோல்வியை சந்தித்தது.

punjab team,match,delhi team,ipl ,பஞ்சாப் அணி, போட்டி, டெல்லி அணி, ஐ.பி.எல்

ஐபிஎல் ரன் குவிப்பில் கேஎல் ராகுல் 302 ரன்களுடன் முதல் இடத்தையும், மயங்க் அகர்வால் 272 ரன்களுடனும் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இருப்பினும், அணிகளின் புள்ளிகள் பட்டியலில் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது.

பஞ்சாப் அணிக்கு இன்னும் 9 போட்டிகள் உள்ளது. இதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றை எதிர்பார்க்க முடியும். டெல்லியிடம் வெற்றி பெற வேண்டிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணிக்கு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

Tags :
|