Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கோலி தாயகம் திரும்ப இருப்பது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர்

கோலி தாயகம் திரும்ப இருப்பது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர்

By: Karunakaran Sun, 15 Nov 2020 2:49:53 PM

கோலி தாயகம் திரும்ப இருப்பது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 27-ந்தேதி சிட்னியில் நடக்கிறது. ஒரு நாள், 20 ஓவர் தொடர் முடிந்ததும் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் டிசம்பர் 17-ந்தேதி அடிலெய்டில் பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது. தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவரை அருகில் இருந்து கவனிப்பதற்காக முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்புகிறார்.

இதனால் கடைசி 3 டெஸ்டில் விராட் கோலி விளையாடமாட்டார். இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், முதல் டெஸ்ட் முடிந்ததும் கோலி நாடு திரும்ப இருப்பதால் அது நிச்சயம் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு தாக்கத்தை (பாதிப்பை) ஏற்படுத்தும். கோலி இல்லாததால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவின் ரிச்மோன்ட் கால்பந்து கிளப் அணியில் இருந்து நட்சத்திர வீரர் டஸ்டின் மார்ட்டினை எடுத்து விட்டால் எப்படி இருக்கும்? அது போன்று தான் கோலி இல்லாத நிலைமையும் என்று கூறினார்.

kohli,homeland,indian team,australian coach langer ,கோலி, தாயகம், இந்திய அணி, ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர்

மேலும் அவர், கடந்த முறை இந்திய அணி இங்கு வந்த போது எங்களை டெஸ்ட் தொடரில் தோற்கடித்தது. அவர்கள் மிகச்சிறந்த அணியாக உள்ளனர். அதனால் கோலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நொடி கூட நாங்கள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. தொடர் முழுவதும் எங்களது மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும். அதை செய்து காட்டுவதை எதிர்நோக்கி இருக்கிறோம் என தெரிவித்தார்.

அனேகமாக எனது வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த வீரர் கோலி தான். இவ்வாறு சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவரது பேட்டிங்குக்காக மட்டுமின்றி விளையாட்டு மீதான அவரது அதீத ஆர்வமும், உத்வேகமிக்க பீல்டிங்குக்காகவும் இதை குறிப்பிடுகிறேன். களத்தில் அவர் எல்லா வகையிலும் வெளிப்படுத்தும் துடிப்புமிக்க ஆற்றலை கண்டு வியப்படைகிறேன். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தன்னுடைய குழந்தையின் பிறப்புக்காக அவர் இந்தியா திரும்ப எடுத்த முடிவையும் உயர்வாக மதிக்கிறேன் என லாங்கர் தெரிவித்தார்.

Tags :
|