Advertisement

மூவரின் வேகப்பந்து கூட்டணி; சேவாக்கின் பாராட்டு மழை

By: Nagaraj Thu, 10 Dec 2020 8:51:28 PM

மூவரின் வேகப்பந்து கூட்டணி; சேவாக்கின் பாராட்டு மழை

புவனேஸ்வர் குமார், நடராஜன் மற்றும் பும்ரா ஆகிய மூவரின் வேகப்பந்து கூட்டணி இந்திய அணியை மிகவும் பலம் வாய்ந்ததாக மாற்றியமைக்கும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

2021 நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைக்காக அனைத்து அணிகளும் தங்களை தயார் செய்து கொண்டிருக்கிறது. 2020இல் நடக்க உள்ள டி20 உலக கோப்பை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021 மாற்றி வைக்கப்பட்டது.

இதற்காக அனைத்து அணிகளும் தங்களை முழுமூச்சாக தயார் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 தொடர்களில் இரண்டுக்கு ஒன்று என்ற புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

bhuvneshwar kumar,natarajan,bumra,fastball,alliance ,புவனேஸ்வர் குமார், நடராஜன், பும்ரா, வேகப்பந்து, கூட்டணி

இதன் மூலம் தனது பலத்தை மீண்டும் ஒரு முறை இந்திய அணி நிரூபித்தது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்காக வீரேந்திர சேவாக் தனது வேகப்பந்து வீச்சாளர்களை தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் நடராஜன் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். நடராஜனை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் வீரேந்தர் சேவாக். இந்நிலையில் தீபக் சஹர், முஹம்மத் சமி ஆகிய இருவரையும் தனது வேகப்பந்து வீரர்கள் வரிசையில் சேவாக் சேர்க்காதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சேவாக் கூறுகையில், புவனேஸ்வர் குமார், நடராஜன் மற்றும் பும்ரா ஆகிய மூவரின் வேகப்பந்து கூட்டணி இந்திய அணியை மிகவும் பலம் வாய்ந்ததாக மாற்றியமைக்கும்.

இவர்களின் பந்துவீச்ச எதிரணி வீரர்களை திணறச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். பும்ராவை போன்று நடராஜன் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார் யார்க்கர், லென்த் பால் மற்றும் ஸ்லோ பால் ஆகியவை மிகக் கச்சிதமாக வீசும் திறன் நடராஜனுக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags :
|