Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 2012-ம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது - பி.வி சிந்து

2012-ம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது - பி.வி சிந்து

By: Karunakaran Mon, 27 July 2020 2:02:43 PM

2012-ம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது - பி.வி சிந்து

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து பேட்டி அளித்தபோது, 2012-ம் ஆண்டு சீனா மாஸ்டர்ஸ் போட்டியின் கால்இறுதி சுற்றில் அப்போதைய ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தினேன். அது தான் எனது பேட்மிண்டன் வாழ்க்கையில் திருப்புமுனை என்று சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

நான் விளையாடத் தொடங்கிய போது நன்றாகத் தான் ஆடினேன். ஆனால் சர்வதேச தரத்துக்கு இணையாக இல்லை. முதல் சுற்றில் தோற்பதும், தகுதி சுற்றுடன் வெளியேறுவதும் தொடர்ந்தது. அதன் பிறகு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன் என ‘ஆன்-லைன்’ கலந்துரையாடலில் பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

pv sindhu,2012 olympic,champion li zhou,china ,பி.வி.சிந்து, 2012 ஒலிம்பிக், சாம்பியன் லி ஜாவ், சீனா

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பிய போது ரசிகர் ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்கினார். அந்த நிகழ்வு மனதை ஆழமாக தொட்டு விட்டது. இப்போது கூட அதை நினைத்து பார்ப்பேன். அதன் பிறகு அந்த ரசிகருக்கு கடிதம் எழுதியதுடன், கொஞ்சம் பணமும் அனுப்பி வைத்ததாக என்று பி.வி.சிந்து நெகிழ்வுடன் கூறினார்.

மேலும் அவர், முன்பு எந்த நேரமும் பேட்மிண்டனிலேயே கவனம் இருந்ததால் நேரம் கிடைப்பதில்லை. இப்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பதால் சில புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். சமையல் செய்கிறேன். அடிக்கடி ஓவியமும் வரைகிறேன் என்று பகிர்ந்துள்ளார்.

Tags :