Advertisement

அந்த கோப்பையை விட இந்த கோப்பையை வெல்வதுதான் கடினம்

By: Nagaraj Tue, 13 June 2023 11:36:46 PM

அந்த கோப்பையை விட இந்த கோப்பையை வெல்வதுதான் கடினம்

புதுடெல்லி: உலக கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

லண்டன் ஓவலில் நடந்த 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இந்தியாவின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சர்ச்சைக்குரிய கருத்துகளும் பரவலாக உள்ளன. உலக கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

difficulty,ganguly,ipl,opinion,trophy,world cup, ,உலக கோப்பை, ஐபிஎல், கங்குலி, கடினம், கருத்து, கோப்பை

இது குறித்து அவர் கூறுகையில், உலக கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம். ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளுக்குப் பிறகுதான் பிளேஆஃப் விளையாட முடியும்.

ஆனால், உலகக் கோப்பையில் 4-5 போட்டியில் விளையாடினாலேயே அரையிறுதியில் விளையாடலாம். ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல 17 போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|