Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் டி20 லீக்கில் இதுவரை ஓவருக்கு சராசரியாக குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்தவர்கள்

ஐபிஎல் டி20 லீக்கில் இதுவரை ஓவருக்கு சராசரியாக குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்தவர்கள்

By: Karunakaran Mon, 05 Oct 2020 6:00:57 PM

ஐபிஎல் டி20 லீக்கில் இதுவரை ஓவருக்கு சராசரியாக குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்தவர்கள்

ஐபிஎல் தொடரில் இதுவரை 18 போட்டிகள் முடிவடைந்துள்ளன. ஷார்ஜாவில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களை தாண்டிய நிலையில் உள்ளன. துபாய், அபு தாபியில் சராசரியாக 160-க்கும் உள்ளது. டி20 என்றாலே பேட்ஸ்மேன்கள் தான். இருப்பினும் இதில் சுழற்பந்து வீச்சாளர்களும் அவ்வப்போது அசத்தி வருகிறார்கள்.

இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் அக்சார் பட்டேல் 3 போட்டிகளில் 10 ஓவர்கள் வீசி 46 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஓவருக்கு சராசரியாக 4.6 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதுதான் ஒரு பந்து வீச்சாளர் ஓவருக்கு சராசரியாக கொடுக்க குறைந்த ரன்னாகும்.

lowest average,runs,ipl t20 league,match ,குறைந்த சராசரி, ரன்கள், ஐபிஎல் டி 20 லீக், போட்டி

ஆர்சிபி அணியின் வாஷிங்டன் சுந்தர் 4 போட்டிகளில் 11 ஓவர்கள் வீசி 52 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். சராசரி 4.72 ஆகும். ஐதராபாத் அணியின் ரஷித் கான் 5 போட்டிகளில் 104 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். சராசரி 5.20 ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜாஃப்ரா ஆர்சர் 4 போட்டிகளில் 14.1 ஓவர்கள் வீசி 99 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். சராரி 6.75 ஆகும்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் புவனேஷ்வர் குமார் 4 போட்டிகளில் 14.1 ஓவரில் 99 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். சராசரி 6.98. சாஹல் 4 போட்டிகளில் 16 ஓவரில் 115 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். சராசரி 7.18 ஆகும். பும்ரா 5 போட்டிகளில் 20 ஓவர்கள் வீசி 176 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். சராசரி 8.80 ஆகும்.

Tags :
|