Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஒரே அணிக்கு கேப்டனாக இருந்து 100 வெற்றிகளை பெற்ற முதல் நபர் என டோனி சாதனை

ஒரே அணிக்கு கேப்டனாக இருந்து 100 வெற்றிகளை பெற்ற முதல் நபர் என டோனி சாதனை

By: Karunakaran Sun, 20 Sept 2020 1:05:22 PM

ஒரே அணிக்கு கேப்டனாக இருந்து 100 வெற்றிகளை பெற்ற முதல் நபர் என டோனி சாதனை

13வது ஐபிஎல் 2020 சீசன் நேற்று மாலை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது.

அம்பதி ராயுடு மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் அரைசதம், சாம் கர்ரன் அதிடி ஆட்டம் ஆகியவற்றால் 4 பந்துகள் மீதமுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை பழிதீர்த்து கொண்டது.

tony,100 wins,captaining,csk team ,டோனி, 100 வெற்றிகள், கேப்டன், சிஎஸ்கே அணி

இந்த வெற்றியின் மூலம் ஒரே அணிக்கு கேப்டனாக 100 வெற்றிகளை தேடிக்கொடுத்தவர் என்ற பெருமையை எம்.எஸ். டோனி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு கேப்டனாக 100 வெற்றிகள் பெற்ற நபர் என்ற பெருமையை டோனி பெற்றிருந்தார்.

லுங்கி நிகிடி பந்தில் குருணால் பாண்ட்யாவை கேட்ச் பிடித்து ஆட்டமிக்கச் செய்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 250 பேர் அவுட்டாக்கிய முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் டோனி பெற்றுள்ளார். 438 நாட்களுக்கு பின் களமிறங்கி, டோனி இத்தகையை சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|