Advertisement

உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆன லாபஸ்சேன்

By: Karunakaran Fri, 18 Dec 2020 5:01:49 PM

உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆன லாபஸ்சேன்

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 244 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, அஸ்வின் ஆகியோர் அபாரமாக பந்து வீசினார். 15-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேத்யூ வடே 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான லாபஸ்சேன் களம் இறங்கினார். முதல் இரண்டு பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 3-வது பந்து பேட் விளம்பில் பட்டு விக்கெட் கீப்பருக்கும் முதல் ஸ்லிப்பிற்கும் இடையே பறந்தது. சாஹா டைவ் அடித்தார். ஆனால் பந்து கையில் படவில்லை. 18-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை லெக்சைடில் தூக்கி அடித்தார்.

umesh yadav,test match,lpw,lapassen ,உமேஷ் யாதவ், டெஸ்ட் போட்டி, எல்பிடபிள்யூ, லாபசென்

பும்ரா பவுண்டரி லைனில் பிடிக்க முயன்று கோட்டை விட்டார். இதனால் 12 ரன்னில் மீண்டும் ஒருமுறை லாபஸ்சேன் தப்பினார். 23-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை லெக் சைடு தூக்கி அடிக்க முயன்றார். பந்து பிரித்வி ஷா கைக்கு சென்றது. ஆனால் பிரித்வி ஷா எளிதாக பிடிக்க வேண்டியதை கோட்டை விட்டார்.

இதனால் 3-வது முறையாக 21 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். இறுதியாக 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ, ஆனார். இவர்தான் ஆஸ்திரேலியா அணியில் முதல் 6 பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் அடித்தார். முதலிலேயே ஆட்டமிழந்திருந்தால் இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக இருந்திருக்கும்.

Tags :
|