Advertisement

சச்சினின் 2 சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி

By: vaithegi Thu, 16 Nov 2023 10:34:20 AM

சச்சினின் 2 சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி


ஒரே நாளில் சச்சனின் 2 சாதனைகளை முறியடித்தார் ...நடப்பு உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடித்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50-வது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். இதையடுத்து நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார்.

மேலும் ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம், உலகக்கோப்பை தொடர்பில் அதிக ரன்களை குவித்தது என்ற சச்சினின் 2 சாதனைகளை கோலி முறியடித்தார். ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்திருந்தார் விராட் கோலி. 106 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார்.

virat kohli,sachin,achievement ,விராட் கோலி,சச்சின் ,சாதனை


2003 உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 673 ரன்கள் சச்சின் டெண்டுல்கர் எடுத்திருந்தார். அதுவே தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் 692 ரன்களை எடுத்ததன் மூலம் சச்சினின் சாதனையை விராட்கோலி முறியடித்திருக்கிறார்.

நடப்பு உலகக்கோப்பையில் வங்கதேசம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கோலி சதம் அடித்து இருந்த நிலையில் இன்று 3-வது சதத்தை பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 29, ஒரு நாள் போட்டிகளில் 50, டி20 போட்டிகளில் 1 என்று மொத்தம் 80 சதங்களை அடித்து உள்ளார்.


Tags :
|