Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • விராட் கோலி – கவுதம் கம்பீர் மோதல்; 100 சதவீதம் அபராதம் விதிப்பு

விராட் கோலி – கவுதம் கம்பீர் மோதல்; 100 சதவீதம் அபராதம் விதிப்பு

By: Nagaraj Tue, 02 May 2023 10:38:20 PM

விராட் கோலி – கவுதம் கம்பீர் மோதல்; 100 சதவீதம் அபராதம் விதிப்பு

மும்பை: 100 சதவீத அபராதம்... ஐபிஎல் போட்டியின் போது நேற்று மைதானத்தில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. இதனால் விளையாட்டு மைதானம் சிறிது நேரம் போர்க்களமாக மாறியது. இந்நிலையில், விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு ஐபிஎல் நிர்வாகம் 100 சதவீத அபராதம் விதித்துள்ளது.

சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த சம்பவமே விராட் கோலியின் கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 10 அன்று, பெங்களூரு மற்றும் லக்னோ இடையேயான ஆட்டத்தின் கடைசி பந்தில் லக்னோ வெற்றி பெற்றது. அப்போது, பெங்களூரு ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கம்பீர் சைகை செய்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் லக்னோ அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. ஆட்டத்தின் முடிவில் வீரர்கள் கைகுலுக்கி வெளியேறும் போது விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்தது.

fight,gautham gambhir,instagram,story,virat kohli ,இன்ஸ்டாகிராம், கவுதம் கம்பீர், சண்டை, விராட் கோலி, ஸ்டோரி

இது ஐபிஎல் விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறி இருவருக்கும் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. அதேபோல் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவீன் உல்ஹக்கிற்கு போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ‘ஸ்டோரி’ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘நாம் கேட்பது அனைத்தும் உண்மை அல்ல. அது மற்றவர்களின் கருத்து. நாம் பார்க்கும் அனைத்தும் உண்மையல்ல. அது அவரவரின் பார்வை’ என எழுதியுள்ளார். விராட் கோலி – கவுதம் கம்பீரின் சண்டையை அடுத்து விராட் கோலியின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tags :
|
|