Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்த விராட்கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்த விராட்கோலி

By: Nagaraj Sun, 29 Nov 2020 7:41:49 PM

சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்த விராட்கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்களை கடந்து சாதனைப்படைத்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. தோல்வி நேரத்திலும் ஒரு சாதனை நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

390 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியால் 338 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் விராட் கோலி.

virat kohli,record,6th player,runs,2nd indian ,விராட்கோலி, சாதனை, 6வது வீரர், ரன்கள், 2வது இந்தியர்

விராட் கோலி இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 11977 ரன்களையும், டெஸ்ட் போட்டியில் 7240 ரன்களையும், டி 20 போட்டியில் 2794 ரன்களையும் அடித்து மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 22,011 ரன்களை அடித்துள்ளார்.

டிசம்பர் 2 ஆம் தேதி நடக்க இருக்கும் 3 ஆவது டி 20 போட்டியில் விராட் கோலி 23 ரன்கள் அடித்தால் ஒரு நாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12,000 ரன்களை கடந்த 6 ஆவது வீரர் என்ற சாதனையையும், 2 ஆவது இந்தியர் என்ற சாதனையையும் படைப்பார்.

அதேநேரம் குறைந்த போட்டிகளில் 12000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடிப்பார் விராட் கோலி.

Tags :
|
|