Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சாஹல் விக்கெட்டை நோக்கி நேர்த்தியாக பந்துவீசி ஆட்டத்தின் தன்மையை மாற்றியதாக விராட் கோலி புகழாரம்

சாஹல் விக்கெட்டை நோக்கி நேர்த்தியாக பந்துவீசி ஆட்டத்தின் தன்மையை மாற்றியதாக விராட் கோலி புகழாரம்

By: Karunakaran Tue, 22 Sept 2020 2:11:52 PM

சாஹல் விக்கெட்டை நோக்கி நேர்த்தியாக பந்துவீசி ஆட்டத்தின் தன்மையை மாற்றியதாக விராட் கோலி புகழாரம்

13-வது ஐபிஎல் 2020 கிரிக்கெட்டின் 3-வது போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. இறுதியில், ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது. விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கி உள்ளது.

virat kohli,bowling,chahal,wicket ,விராட் கோலி, பந்துவீச்சு, சாஹல், விக்கெட்

இந்த வெற்றி குறித்து விராட் கோலி கூறுகையில், யசுவேந்திர சாஹல் ஆட்டத்தை மாற்றினார். அவர் போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தார். அவர் மிகவும் திறமையுடன் பந்து வீசினார். விக்கெட்டை நோக்கி நேர்த்தியாக பந்துவீசி ஆட்டத்தின் தன்மையை மாற்றினார். படிக்கல், டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. தொடக்க ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், மிச்சேல் மார்ஷ்க்கு ஏற்பட்ட காயம் ஆட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. சாஹலின் கடைசி ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. நாங்கள் இனி நல்ல நிலையை அடைய வேண்டும். இந்த ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதை எங்களால் சரி செய்ய முடியாது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் கடினமாக போராடுவோம் என்று கூறினார்.

Tags :
|