Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆர்சிபி அணியின் கேப்டன் ஆன பிறகு அதிக ரன்களை குவிக்கும் விராட் கோலி

ஆர்சிபி அணியின் கேப்டன் ஆன பிறகு அதிக ரன்களை குவிக்கும் விராட் கோலி

By: Nagaraj Thu, 17 Sept 2020 10:06:40 AM

ஆர்சிபி அணியின் கேப்டன் ஆன பிறகு அதிக ரன்களை குவிக்கும் விராட் கோலி

ஆர்சிபி அணியின் கேப்டன் ஆன பிறகு அதிக ரன்களைக் குவித்து வருகிறார் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

2013-ல் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அபாரமாக விளையாடி ரன்களைக் குவித்து வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை.

2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

virat kohli,rcb team,run accumulation,captain ,விராட் கோலி, ஆர்சிபி அணி, ரன் குவிப்பு, கேப்டன்

அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வருட ஐபிஎல் போட்டியையாவது வெல்வோமா என்கிற ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஆர்சிபி அணி. அதன்படி, லோகோவின் வடிவத்தை மாற்றியுள்ளார்கள். இந்தப் புதிய லோகோ அணிக்கு ராசியாக அமையும் என நம்புகிறது ஆர்சிபி அணி.

2008 முதல் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார் கோலி. 2013-ல் அந்த அணியின் கேப்டன் ஆனார். கேப்டன் ஆன பிறகு கோலியின் பேட்டிங் திறமை அதிகரித்துள்ளது. அணிக்காக அதிக ரன்கள் எடுத்துள்ளார். அதன் புள்ளிவிவரம்:

கேப்டனாக கோலி எடுத்த ரன்கள்: 109 இன்னிங்ஸ், 4010 ரன்கள், சராசரி - 44.06, ஸ்டிரைக் ரேட் - 136.48, சதங்கள் - 5, அரை சதங்கள் - 29. கேப்டன் ஆகும் முன்பு, வீரராக கோலி எடுத்த ரன்கள்: 60 இன்னிங்ஸ், 1402 ரன்கள், சராசரி - 29.96, ஸ்டிரைக் ரேட் - 119.42, சதங்கள் - 0, அரை சதங்கள் - 7

Tags :