Advertisement

என் மனைவியின் திறன்... புகழ்ந்து தள்ளியுள்ள விராட் கோலி

By: Nagaraj Thu, 02 Mar 2023 10:30:59 PM

என் மனைவியின் திறன்... புகழ்ந்து தள்ளியுள்ள விராட் கோலி

மும்பை: மனைவியை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

விராட்கோலி அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் மகள் வாமிகா பிறந்து இரண்டு ஆண்டுகளாகின்றன. தன் நட்சத்திரப் பெற்றோரோடு அந்தக் குழந்தையும் இப்போது மீடியாக்களின் ஸ்வீட் ஹார்ட் ஆக மாறிவிட்டது.

சமீபத்தில் இணையத்தில் வெளியான பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்ட விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மா குறித்தும் மகள் பிறந்த பிறகு அவரது பொறுப்பான தாய்மை குறித்தும் பெருமிதத்துடன் பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதில் தன் மனைவியின் தாய்மைப் பயணமே தனக்கு இப்போதெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஸனாக விளங்குகிறது என்று கூறி இருந்தார். அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டின் வெற்றிகரமான நாயகிகளில் ஒருவர். இப்போது ஒரு குழந்தைக்கு அம்மா என்ற நிலையில் அந்தப் பொறுப்பையும் சாதூர்யமாகச் செய்து கொண்டு தன் திரைப்பட வேலைகளையும் புத்திசாலித்தனமாக அணுகுகிறார்.

virat kohli,anushka,life,challenges,travel ,விராட் கோலி, அனுஷ்கா, வாழ்க்கை, சவால்கள், பயணம்

இது மிகச் சவாலான பொறுப்பு. இரண்டையுமே அவர் எப்படி திறம்பட நிர்வகிக்கிறார் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அனுஷ்கா அதை வெகு திறமையாகவும், அக்கறையுடனும் செய்கிறார்.

அவரோடு ஒப்பிடும் போது, நான் செய்து கொண்டிருப்பதெல்லாம் எனக்குப் பிரமாதமான வேலையாகத் தெரியவில்லை. நான் எனக்குப் பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டையே எனது தொழிலாகவும் தொடர்கிறேன். ஆனால் அனுஷ்கா அப்படி இல்லை. ஒரு நடிகை, தயாரிப்பாளர் என்பதோடு கூடுதலாக ஒரு தாயாகவும் அனுஷ்கா பயணிக்க வேண்டியிருக்கிறது.

அந்தப் பயணத்தில் அவர் எதிர்கொள்ளும் சவால்களோடு ஒப்பிடும் போது என்னுடையது வெறும் 5% ஆகக் கூட இருக்காது என்று நான் நம்புகிறேன். எங்கள் மகள் பிறந்த பிறகு ஒரு தாயாக அனுஷ்காவின் மொத்த வாழ்க்கையுமே மாறி விட்டது. இந்த மாற்றத்தை அவர் வெகு சாமர்த்தியமாகக் கையாள்கிறார்.

அவர்களோடு இருக்கும் எனக்கு அனுஷ்காவின் வலிமை மிகப்பெரிய இன்ஸ்பிரேஸனாக இருக்கிறது. இவ்வாறு தனது மனைவி குறித்து பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார் விராட் கோலி.

Tags :
|