Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி முதல் இடம்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி முதல் இடம்

By: Karunakaran Thu, 27 Aug 2020 3:47:07 PM

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி முதல் இடம்

ஐசிசி நேற்று அணிகள் மற்றும் வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டது. இதில் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், ரோகித் சர்மா 2-வது இடத்திலும் நீடித்துள்ளனர். டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தையும், கேஎல் ராகுல் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்திலும், விராட் கோலி 2-வது இடத்திலும், மற்றொரு ஆஸ்திரேலிய வீரர்கள் மார்னஸ் லாபஸ்சேனே 3-வது இடத்திலும் உள்ளனர்.

virat kohli,icc,odi batsman,ranking ,விராட் கோலி, ஐ.சி.சி, ஒருநாள் பேட்ஸ்மேன், தரவரிசை

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் டிரென்ட் போல்ட் முதல் இடத்தையும், பும்ரா 2-வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், டி20-க்கான பந்து வீச்சு தரவரிசையில் ரஷித் கான் முதல் இடத்திலும் உள்ளனர்.

அணிகளுக்கான தரவரிசையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டி 3-வது இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சு தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

Tags :
|