Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்கபேட் விராட் கோலிக்குதான்!!!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்கபேட் விராட் கோலிக்குதான்!!!

By: Nagaraj Sun, 19 Nov 2023 12:28:11 PM

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்கபேட் விராட் கோலிக்குதான்!!!

அகமதாபாத்: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றன. தற்போது இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 711 ரன்கள் உடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது இறுதிப்போட்டி மட்டும்தான் இருக்கிறது.

ஒவ்வொரு உலக கோப்பையிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு தங்க பேட் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில் இம்முறை விராட் கோலி தான் அந்த தங்கபேட்டை வாங்க இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஏனென்றால் விராட் கோலிக்கு அடுத்ததாக தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் தான் இருக்கிறார். அவர் 10 போட்டிகளில் விளையாடி 594 ரன்கள் அடித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டியை விட்டு வெளியேறிவிட்டது என்பதால் இனி அவர் விளையாட முடியாது. இதேபோன்று மூன்றாவது இடத்தில் ரச்சின் ரவீந்திரா 578 ரன்கள் உடன் இருக்கிறார்.

virat kohli,milestone,fans,golden bat,anticipation,pride ,விராட் கோலி, மைல் கல், ரசிகர்கள், தங்க பேட், எதிர்பார்ப்பு, பெருமை

நியூசிலாந்து அணியும் தொடரை விட்டு வெளியேறிவிட்டது. இதேபோன்று நான்காவது இடத்தில் டாரல் மிச்சல் 552 ரன்களுடன் இருக்கிறார்.இதனால் இவருக்கும் வாய்ப்பு கிடைக்காது.

ஐந்தாவது இடத்தில் ரோகித் சர்மா பத்து போட்டிகள் விளையாடி 550 ரன்கள் அடித்திருக்கிறார். ஆறாவது இடத்தில் டேவிட் வார்னர் 10 போட்டிகளில் விளையாடி 528 ரன்களும், ஏழாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பத்து போட்டிகளில் விளையாடி 526 ரன்களும் அடித்துள்ளனர். இந்த மூன்று வீரர்களும் இறுதிப்போட்டியில் விளையாடப் போகிறார்கள்.

அவர்களை விட விராட் கோலி 160 ரன்களுக்கு மேல் அதிகமாக இருக்கிறார். இதனால் 95 சதவீதம் விராட் கோலி தான் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெறுவார் என்பது தெரிய வருகிறது.

இதன் மூலம் விராட் கோலி 800 ரன்கள் என்ற மைல் கல்லை தொடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags :
|