Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 2023 உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றார் விராட் கோலி

2023 உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றார் விராட் கோலி

By: vaithegi Mon, 20 Nov 2023 10:01:29 AM

2023 உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றார் விராட் கோலி


இந்தியா: நேற்று நடைபெற்ற நடப்பு உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

நடப்பு உலகக்கோப்பைக்கான தொடர் ஆட்டநாயகன் விருதுக்கு அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகளிலிருந்து 9 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 4 இந்திய வீரர்களும், 2 ஆஸ்திரேலிய வீரர்களும், 2 நியூஸிலாந்து வீரர்களும் மற்றும் ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் இருந்தனர்.

virat kohli,world cup , விராட் கோலி,உலகக்கோப்பை

இதையடுத்து அதன்படி நாமினி பட்டியலில் இந்திய வீரர்களில், விராட் கோலி , முகமது ஷமி , ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் , ஆடம் ஜம்பா, நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், விராட் கோலி 2023 உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்று உள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளனர். எனவே அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 11 போட்டிகளில் 765 ரன்கள் குவித்து உள்ளார்.

உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருது:

1992 – மார்ட்டின் குரோவ்
1996 – சனத் ஜெயசூர்யா
1999 – லான்ஸ் க்ளூஸ்னர்
2003 – சச்சின் டெண்டுல்கர்
2007 – க்ளென் மெக்ராத்
2011 – யுவராஜ் சிங்
2015 – மிட்செல் ஸ்டார்க்
2019 – கேன் வில்லியம்சன்
2023 – விராட் கோலி

Tags :