Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது - ஐதராபாத் கேப்டன் வார்னர் பாராட்டு

விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது - ஐதராபாத் கேப்டன் வார்னர் பாராட்டு

By: Karunakaran Wed, 28 Oct 2020 2:10:43 PM

விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது - ஐதராபாத் கேப்டன் வார்னர் பாராட்டு

ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றபோது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் - விருத்திமான் சாஹா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 8.4 ஓவரில் ஐதராபாத் 100 ரன்னைத் தொட்டது. வார்னர் 34 பந்தில் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விருத்திமான் சாஹா இந்த ஆட்டத்தில் 45 பந்தில் 87 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

viruthiman saha,fantastic,hyderabad team,warner ,விருத்திமன் சஹா, அருமையான, ஹைதராபாத் அணி, வார்னர்

இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. டெல்லி அணி 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தனது 5-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறுகையில், தொடக்க வீரராக களம் இறங்கிய விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. நம்ப முடியாத வகையில் அவர் அபாரமாக ஆடினார். மிடில் ஆர்டர் வரிசையில் வில்லியம்சன் ஆடுவதற்கு தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டார். இது மிகவும் கஷ்டமான முடிவாகும் என்று கூறினார்.

Tags :