Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்தியாவுக்கு எதிராக வருகிற 17-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் வார்னர் ஆடவில்லை

இந்தியாவுக்கு எதிராக வருகிற 17-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் வார்னர் ஆடவில்லை

By: Karunakaran Wed, 09 Dec 2020 2:06:51 PM

இந்தியாவுக்கு எதிராக வருகிற 17-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் வார்னர் ஆடவில்லை

உலகின் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னரும் ஒருவர். தொடக்க வீரரான அவர் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதுமே அச்சுறுத்தலாக இருப்பார். இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் வார்னர் சிறப்பாக ஆடினார். முதல் ஆட்டத்தில் 69 ரன்னும், 2-வது போட்டியில் 83 ரன்னும் எடுத்தார்.

2-வது போட்டியில் பீல்டிங்கின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. தசை பிடிப்பால் அவதிப்பட்ட அவர் உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதனால் 3-வது போட்டியில் ஆடவில்லை. இதேபோல 20 ஓவர் தொடரிலும் அவர் காயத்தால் விலகியிருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக வருகிற 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்டில் வார்னர் ஆடவில்லை.

warner,first test,india,australia series ,வார்னர், முதல் டெஸ்ட், இந்தியா, ஆஸ்திரேலியா தொடர்

முதல் டெஸ்டில் வார்னர் ஆடவில்லை என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. காயத்தில் இருந்து குணமடையததால் அவர் ஆடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் வார்னர் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய ஏ அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய ஏ அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த அணியில் தொடக்கவீரர் ஜோபர்ன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags :
|
|