Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் போட்டிகளை நேரடியாக பார்க்கலாம்; ரசிகர்கள் உற்சாகம்

ஐபிஎல் போட்டிகளை நேரடியாக பார்க்கலாம்; ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Fri, 21 Aug 2020 9:07:11 PM

ஐபிஎல் போட்டிகளை நேரடியாக பார்க்கலாம்; ரசிகர்கள் உற்சாகம்

ஆஹா சூப்பர் முடிவு என்று கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடையும் விதத்தில் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் 19 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ளது. இந்த போட்டிகளை நேரடியாக பார்க்க பார்வையாளர்களை அனுமதிக்க ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

cricket regulation,spectators,ethics,ipl ,கிரிக்கெட் கட்டுப்பாட்டு, பார்வையாளர்கள், நெறிமுறைகள், ஐபிஎல்

இது குறித்து ஐக்கிய அமீரக அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சங்கத்துடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என அமீரக கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலர் முபாஷிர் உஸ்மானி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் மைதானங்களில் பார்வையாளர்களை அனுமதிக்க எந்த வகையான வழிகாட்டும் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தின் முடிவுக்கு உட்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|