Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பஞ்சாப் அணிக்கெதிராக விக்கெட் இழக்காமல் வாட்சன் - டு பிளிஸ்சிஸ் சேஸிங் இலக்கை எட்டி சாதனை

பஞ்சாப் அணிக்கெதிராக விக்கெட் இழக்காமல் வாட்சன் - டு பிளிஸ்சிஸ் சேஸிங் இலக்கை எட்டி சாதனை

By: Karunakaran Mon, 05 Oct 2020 5:51:09 PM

பஞ்சாப் அணிக்கெதிராக விக்கெட் இழக்காமல் வாட்சன் - டு பிளிஸ்சிஸ் சேஸிங் இலக்கை எட்டி சாதனை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று அதிரடியாக ஆடியது. பஞ்சாபுக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சனும், டு பிளிஸ்சிஸும் 179 இலக்கை விக்கெட் இழக்காமல் எட்டினர். இருவரும் இணைந்து 181 ரன் எடுத்தனர். இதனால் சி.எஸ்.கே. 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரன் இலக்கில் 181 ரன் எடுத்ததன் மூலம் வாட்சன் -டு பிளிஸ்சிஸ் ஜோடி புதிய சாதனை படைத்தது.

ரன் இலக்கில் தொடக்க ஜோடியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் 2-வது இடத்தை பிடித்தது. 2017-ம் ஆண்டு கொல்கத்தா தொடக்க வீரர்கள் காம்பீர் - கிறிஸ் லின் ஜோடி 184 ரன் எடுத்தது முதலிடமாகும். மும்பை அணியின் தெண்டுல்கர் - வெயினி் ஸ்மித் 163 ரன்கள் எடுத்தனர். கில்கிறிஸ்ட் - விவிஎஸ் லட்சுண்மன் 155 ரன்கள் எடுத்தனர்.

watson,du plessis,punjab team,wicket ,வாட்சன், டு பிளெசிஸ், பஞ்சாப் அணி, விக்கெட்

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடியின் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக முரளி விஜய்யும், மைக் ஹஸ்சியும், 151 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை வாட்சன் - டு பிளிஸ்சிஸ் ஜோடி முறியடித்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது 2-வது முறையாகும்.

இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு இதே பஞ்சாபுக்கு எதிராக சி.எஸ்.கே. 10 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. இந்த ஐ.பி.எல். போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது முதல் நிகழ்வாகும். ஒட்டுமொத்தத்தில் ஐ.பி.எல். போட்டியில் 12-வது முறையாக இந்த நிகழ்வு நடந்துள்ளது.




Tags :
|