Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தனது மகளின் 16-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய வெயின் பிராவோ

தனது மகளின் 16-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய வெயின் பிராவோ

By: Karunakaran Tue, 04 Aug 2020 5:07:30 PM

தனது மகளின் 16-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய வெயின் பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக உள்ள வெயின் பிராவோ, ஐபிஎல் லீ்க்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர், இசை மீது அதிக ஆர்வமுடையவர். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல பாடல்களை உருவாக்கியுள்ளார்.

இவரது சாம்பியன்ஸ் பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. சமீபத்தில் டோனியின் பிறந்த நாளையொட்டி, இவர் பாடல் ஒன்றை உருவாக்கினார். தற்போது அவரது மகள் வெய்னிஸின் 16-வது பிறந்த நாள் கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

wayne bravo,birthday,daughter birthday,chennai super kings ,வெய்ன் பிராவோ, பிறந்த நாள், மகள், சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த பிறந்த நாள் விழாவில் வெய்னிஸ் தோழிகள் கலந்து கொண்டனர். அப்போது பிராவோ சாம்பியன்ஸ் பாடலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாடி அசத்தினார். அவர் பாடலை பாடியபோது அங்கிருந்த அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடினர்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் வெய்னிஸ் 16 வயது தாண்டுகிறார். ஒரு சாம்பியன் தருணத்திற்கு அழைப்பு விடுக்கிறது. வெய்னிஸ் எதிர்நோக்கும் இனிமையாக விசயங்களுக்கு என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவிட்டுள்ளது.

Tags :