Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முன்னேற்றம்

By: Karunakaran Wed, 15 July 2020 09:55:39 AM

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஜாசன் ஹோல்டர் 32 புள்ளிகளை கூடுதலாக பெற்றுள்ளார். இதனால் அவரது புள்ளி எண்ணிக்கை 862 ஆக உயர்ந்துள்ளது.

west indies captain,jason holder,test cricket,ranking ,மேற்கிந்திய தீவுகள் கேப்டன், ஜேசன் ஹோல்டர், டெஸ்ட் கிரிக்கெட், தரவரிசை

கடந்த 20 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஒருவரின் அதிகபட்ச புள்ளியை ஜாசன் ஹோல்டர் பெற்றுள்ளார். மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் மேலும் 46 புள்ளிகள் பெற்றுள்ளார்.

இதனால் ஷனோன் கேப்ரியல் மொத்தம் 726 புள்ளிகளுடன் ஒரு இடம் உயர்ந்து 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். டாப்-10 பந்து வீச்சாளர்களில் இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மட்டும் 7-வது இடத்தில் உள்ளார்.

Tags :