Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நியூசிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 244 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 244 ரன்கள் குவிப்பு

By: Karunakaran Sun, 13 Dec 2020 4:01:14 PM

நியூசிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 244 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்தது. ஹென்றி நிக்கோலஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 174 ரன்னும் , வாக்னர் 66 ரன்னும் எடுத்தனர்.

கேப்ரியல், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டும், செமர் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 இழப்புக்கு 124 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது.

west indies,244 runs,2nd innings,new zealand ,மேற்கிந்திய தீவுகள், 244 ரன்கள், 2 வது இன்னிங்ஸ், நியூசிலாந்து

பாலோ ஆனை தவிர்க்க மேலும் 137 ரன் தேவை, கைவசம் 2 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் அணி மேலும் 7 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 2 விக்கெட்டை இழந்தது. அந்த அணி 56.4 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் பாலோ ஆன் ஆனது.

பாலோஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 329 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 2-வது இன்னிங்சிலும் திணறியது. 170 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டை இழந்தது. மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 244 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தனர். இந்த டெஸ்டிலும் நியூசிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது.

Tags :