Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் என்ன நடக்கும்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் என்ன நடக்கும்

By: vaithegi Sun, 28 May 2023 2:02:30 PM

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் என்ன நடக்கும்

இன்று சென்னை மற்றும் குஜராத்தின் இறுதி ஆட்டம் ..... ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று மற்றும் பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இறுதி சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தோனி தலைமையிலான சென்னை அணி முதல் தகுதி சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றது நேரடியாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால், குஜராத் அணி முதல் தகுதி சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் 2-வது தகுதி சுற்றில் மும்பை அணியுடன் மோதி 62 ரங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

ipl final,chennai team ,ஐபிஎல் இறுதிப்போட்டி,சென்னை அணி

இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிச்சுற்று போட்டியில் மழையானது குறுக்கிட்டு ஆட்டமானது தாமதமாக தொடங்கினால் விளையாடும் நேரம் மற்றும் மைதானத்தின் தரத்தைப் பொறுத்து, ஆட்டத்திற்கு 5 முதல் 12 ஓவர்கள் வரை வழங்கப்படும். அதில் வெற்றி பெரும் அணியே சாம்பியன் பட்டம் வெல்லும்.

ஆனால் ஒருவேளை மழையானது நாள் முழுவதும் தொடர்ந்து சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியானது நடைபெறமால் போனால் லீக்சுற்றுகளின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் அணியான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றதாகக் கருதப்படும்.

ஆனால் அகமதாபாத்தில் இன்று மழை பெய்வதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லையென்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக, இந்த ஐபிஎல் சீசனில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக தடைப்பட்டதால் 2 அணிகளுக்கும் ஓரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

Tags :