Advertisement

தோல்விக்கு காரணம் என்ன? ராஜஸ்தான் அணி கேப்டன் விளக்கம்

By: Nagaraj Thu, 01 Oct 2020 10:31:55 AM

தோல்விக்கு காரணம் என்ன? ராஜஸ்தான் அணி கேப்டன் விளக்கம்

தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 12வது போட்டியில் ஷுப்மன் கில் கொடுத்த துவக்கம் மற்றும் பந்து வீச்சில் கமின்ஸ், ஷிவம் மாவி, நாகர்கோட்டி ஆகிய இளம் வேகப்புயல்கல் கலக்கியதாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஸ்மித் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் தோல்வியை சந்தித்தது.

ஆட்டம் முடிந்த பிறகு ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: திட்டமிட்டபடி ஆடவில்லை. சில சமயங்களில் டி20 கிரிக்கெட்டில் இப்படி நடந்து விடும். டாஸ் பற்றி கூறுவதென்றால் இரண்டே இரண்டு தெரிவுதான் உள்ளது.

sharjah,rajasthan,web coaching,recruitment,captain ,ஷார்ஜா, ராஜஸ்தான், வலைப்பயிற்சி, அணிச்சேர்க்கை, கேப்டன்

டாஸ் பிரச்சனையல்ல, பேட்டிங்கில் அதிக விக்கெட்டுகளை சடுதியில் இழந்து விட்டோம். எங்களில் சிலர் இன்னும் ஷார்ஜாவில் ஆடுவதாகவே நினைத்துக் கொண்டிருந்தோம். (சிறிய மைதானம் என்று நினைத்து கொண்டிருந்தோம்)

மைதானம் ஒரு இடத்தில் பெரிதாக இங்கு உள்ளது, அதனால் அந்த பவுண்டரிகளைக் கடந்து அதிக ஷாட்கள் போகவில்லை. பிட்ச் மற்றும் அதன் பரிமாணங்களை சரியாகக் கணிக்கவில்லை. அணிச் சேர்க்கையில் மாற்றம் குறித்து யோசிக்க வேண்டும். கமின்ஸிடம் ஆட்டமிழந்தது பெரிய போராட்டமெல்லாம் இல்லை. கமின்ஸிடம் பேசினேன். அவர் சொன்னார், பொதுவாக நான் அந்தப் பந்துகளை வலைப்பயிற்சியில் அடித்து நொறுக்குவேன் என்றார். ஆனால் இம்முறை நல்ல பந்து விழுந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :